Home
பசுக்கள் ஏன் பராமரிக்கப்பட வேண்டும்?
சிறிது நாட்களுக்கு முன்பு ஒருவர் பசுக்கள் பராமரிப்பிற்கு என ஏன் செலவு செய்ய வேண்டும்? எத்தனையோ பசியிலும் பட்டினியிலும் வாடிக்கொண்டிருக்க, பசுக்களுக்காக செலவிடப்படும் பணம் ஏழை எளியவர்களை முன்னேற்ற உபயோகப்படுத்தலாம், அதுமட்டுமன்றி பசுக்களை உணவிற்காக ஏற்றுமதி செய்வதால் நமக்கு வருமானம் கிடைக்கும் என்று வாதிட்டார். பசுவும் ஒரு கால்நடை அதை தெய்வமாக பார்ப்பதினால்தான் தேவையற்ற ஒரு குழப்பம் வருகிறது என்றும் அவர் தன்னுடைய வாதத்தில் சொன்னார். இது போன்ற கேள்விகள் இன்று பல பேருக்கு இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது
அன்னம் பரப்பிரம்மம் என்று சொல்வார்கள் ஏனென்றால் உணவு இல்லை எனில் உலகில் உயிர்கள் இல்லை. பசுவிற்கும் உணவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பசுவின் நலம் பராமரிக்கப்பட்டால் உணவின் வளம் அதிகரிக்கும். முக்கியமாக நாட்டு பசுக்கள் பராமரிக்கப்படும் பொழுது மண் வளம் செம்மைப்படுத்துகிறது. நம்முடைய வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன, அவை பல்வேறு விஷயங்களுக்கு உதவியாய் இருக்கின்றன அதனால் தான் ஆண்டிபயாடிக் தேவை இல்லாதபோது சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் ஏனெனில் அவ்வாறு சாப்பிடும் பொழுது இந்த நல்ல பாக்டீரியாக்களும் அழிக்கப்பட்டுவிடும். இந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்படும் பொழுது நம் உடல் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுகிறது. இதைத்தான் ஆன்ட்டிபயாட்டிக் எதிர் விளைவு என்று சொல்வார்கள். இதேபோல் மாடுகளின் வயிற்றிலும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் மாடுகள் அசைபோட்டு உணவை உண்ண உண்ண அதை சிதைத்து செரிமானம் செய்து மாடுகளுக்கு சக்தியை கொடுக்கின்றன. பிறகு சாணம் ஆகவும் மாறுகிறது. இந்த சாணத்தில் இந்த நுண்ணுயிர்கள் இருக்கிறது. இதனாலதான் சாணம் மண்புழு தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த சாணத்தில் இருக்கும் நுண்ணுயிர்கள் மண்ணின் வளத்தை பெருக்குகிறது. அந்தக் காலங்களில் கிடா அமைத்தல், பட்டி போடுதல் போன்ற விஷயங்கள் நிலத்தின் வளத்தை பெருக்குவதற்காக செய்யப்பட்டது. அதாவது மாடுகளை, எந்த நிலம் வளம் பெற வேண்டுமோ அந்த இடத்தில் 15 அல்லது 20 நாட்கள் விட்டுவிடுவார்கள். அங்கு போடப்படும் சாணம் மற்றும் கோமியம் வழியாக அந்த நிலம் வலுப்படுத்தப்படுகிறது. அதைத்தான் இப்பொழுது பஞ்சகவ்வியம் என்கின்ற முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் ஜெர்சி பசுக்கள் மற்றும் கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பசுக்கள், சினை ஊசி போடப்பட்டு உருவாக்கப்பட்ட பசுக்கள். இந்த பசுக்களுக்கு உணவில் சிறிது ஆன்ட்டிபயாட்டிக் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த மாடுகளின் சாணம் மற்றும் பால் இவற்றில் ஆன்டிபயாடிக் கொஞ்சம் கலந்து இருக்கிறது. இவ்வாறு கொடுப்பதினால் இவ்வாறு ஆன்டிபயாட்டிக் கொடுப்பதினால் மாடுகளின் வயிற்றில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே இந்த மாடுகளின் சாணம் நில வளத்தை பெருகுவதற்கு உபயோகப்படுத்த இயலாது. இன்னும் சொல்லப்போனால் இந்த மாடுகளின் சாணங்கள் நிலத்தில் உபயோகப்படுத்தும் பொழுது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு ( Antibiotic Resistance ) ஏற்படுகிறது. இயற்கையான உணவு கொடுத்து பராமரிக்கப்படும் பசுக்களின் சாணம் நிலவளத்தை அதிகரிக்கிறது.
அதுமட்டுமன்றி நிலவளம் அதிகப்படுத்தும் பொழுது மண்ணின் வழியாக கார்பன் கிரகிக்கப்படுகிறது. மரங்கள் மூலமாக கிரகிக்கப்படும் கார்பன் போன்று, மண் வழியாக மூன்று மடங்குக்கும் அதிகமாக கார்பன் கிரகிக்கப்படுகிறது. இதனால் வெப்பமயமாதல் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி மண்வளம் அதிகரிக்கப்படும் பொழுது தண்ணீர் உள்வாங்கும் வலிமையும் மண்ணுக்கு அதிகரிக்கப்படுகிறது. நிலவளம் அதிகரிக்கப்படும் பொழுது உணவின் நலம் பாதுகாக்கப்படுகிறது. நிலவளம் இல்லை என்று இன்னும் சிறிது காலத்தில் மக்கள் அனைவரும் பசி பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும். எனவேதான் பசுக்கள் முக்கியமாக நாட்டு பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்திற்கும் ஏதோ ஒரு அடிப்படை கண்டிப்பாக இருக்கிறது கருட புராணத்தின் படி நாம் அனைவரும் கண்டிப்பாக பசு தானம் செய்தல் வேண்டும். முக்கியமாக பசுவை நன்கு பராமரிக்க முடியும் என்பவர்கள் இடம் தானம் செய்தல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பசு தானம் செய்ய விரும்புபவர்கள் cowrescue.org அமைப்பினை தொடர்பு கொண்டால் அவர்கள் கசாப்புக் கடைக்கு செல்லும் பசுமாடுகளை காப்பாற்றி நமண்டி, உத்திரமேரூர், மேல்மலையனூர் இன்னும் இதுபோன்ற பல இடங்களில் இந்த அமைப்பு பசுக்களுக்கு கோசாலை அமைத்து பாதுகாத்து வருகிறது. அதுமட்டுமின்றி பசுக்களை தங்களால் வைத்து பாதுகாக்க முடியும் என்று வரும் விவசாயிகள் மற்றும் குடும்பத்தினருக்கு, பசுக்களை கொடுத்து அவர்கள் மூலமும் பசுக்களை இவர்கள் பராமரித்து வருகின்றனர். பசுக்களுக்கு இவர்கள் செய்து வரும் தொண்டு மகத்தானது. அதுமட்டுமன்றி இவர்கள் கோசாலை வைத்து பராமரிக்கும் பசுக்கள் மூலமாக பஞ்சகவ்வியம் தயாரித்து அதனை கோவில்களுக்கு அபிஷேகத்திற்கு கொடுக்கின்றனர். இந்தப் பதிவைப் படிக்கும் அடியவர்கள் https://www.cowrescue.org/ . இந்த அமைப்பிற்கு பசுக்களை காப்பதற்காக நிதி உதவி அளிக்க முன்வரும் பொழுது நிலவளம் நீர்வளம் உணவு வளம் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி இவ்வாறு காப்பாற்றப்படும் பசுக்களில் இருந்து பஞ்சகவ்வியம் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பாக்கியமும் கிடைக்கிறது. இந்த அமைப்பின் வங்கி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Donate via UPI IDs :
CR1.03@CMSIDFC
for BANK TRANSFER :
Name : TSSWT-COW RESCUE,
A/c No. : 10067207211,
Bank : IDFC FIRST Bank,
Branch : DR. RK Salai,
IFSC : IDFB0080122
Initiate, Support and Share
TO KNOW MORE, REACH US,
+91 98408 66290 / +91 98408 66280
Comments
Post a Comment